புத்தாண்டு கொண்டாட்டம்

சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-02 08:04 GMT

சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அமைப்பு நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். சேலம் பவர் கிராண்ட் ரோட்டரி தலைவர் வேணுகோபால் வரவேற்றார். இதில், சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பு நிர்வாகிகள் செல்வம், பாஸ்கரன், வெங்கடேசன், வக்கீல் சிவநேசன், ஆடிட்டர் சரவணன், பரமேஸ்வரன், மாது, குழந்தைவேல், மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சேலம் மாநகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு இலவசமாக போர்வைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News