பாலிடெக்னிக் கல்லூரியில் புதுமுக பயிற்சி வகுப்பு

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுமுக பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

Update: 2024-07-03 15:11 GMT

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுமுக பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.


ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுமுக பயிற்சி வகுப்பு தொடக்கம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024}25 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்ற, மாணவ மாணவிகளுக்கு புது முக பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். இயற்பியல் விரிவுரையாளர் கண்ணதாசன் வரவேற்றார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் செல்வராஜ், கல்லூரியின் சிறப்பம்சங்களை விளக்கினார். அனைத்து துறைத் தலைவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் விரிவுரையாளர் லோகேஷ்குமார் செய்திருந்தார். இறுதியாக ஆங்கில விரிவுரையாளர் ராமதாஸ் நன்றி கூறினார். கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன. 2024,25 ஆம் கல்வியாண்டில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் தவிர, சேர்ந்து பயில காலியிடம் உள்ளது. கல்லுரியில் சேர்க்கை பெற பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதலாம் ஆண்டிலும், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஐடிஐ, தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேரலாம். எனவே அனைத்து வசதிகளும் உள்ள இந்த கல்லூரியில், மாணவ }மாணவியர் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News