தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் ஆணை வழங்க வலியுறுத்தி ஒன்றிய தொடக்கப்பள்ளி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்: இரவில் நடந்த சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ்

Update: 2024-08-02 09:59 GMT
தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்ட 83 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை இதுகுறித்து மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் பலமுறை கல்வி துறையில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது 32 ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி அலுவலர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் ரமணாவை முற்றுகைக்கு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு உத்தரவின்படி அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கல்வி அதிகாரி இன்னும் இரண்டு வாரத்தில் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இரவு நேரத்தில் சுமார் 4 மணி நேரம் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

Similar News