சர்கார்மாமுண்டி காரக்குட்டிபாளையம் பகுதியில், வழித்தடம் ஆக்கிரமிப்பு அகற்றகோரி, மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மல்லசமுத்திரம் யூனியன், சர்க்கார் மாமுண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட, காரக்குட்டிபாளையம் பகுதியில், அப்பகுதி மக்கள் சுமார் 100ஆண்டுகளாக, 3தலைமுறையாக பயன்படுத்திவந்த வழித்தடத்தை அப்பகுதியை சேர்ந்தசிலர் கடந்த ஒருவருடமாக வழிமறைத்து, கம்பிவேளை அமைத்து ஆக்கிரமிப்புசெய்துவிட்டனர். இதனால், சாலை குறுகலானதால் பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் செல்லமுடியாமல் அவதிபட்டு வந்தனர். நேற்று காந்திஜெயந்தியை முன்னிட்டு, அப்பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்குவந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகள் நேரில் வந்து அளவீடுசெய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, முறையான வழித்தடம் அமைத்துதர நடவடிக்கை எடுத்த பின்னர்தான் கலைந்து செல்வோம் என அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த பி.டி.ஓ.,அருளப்பன் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்துறை அதிகாரிகள் மூலம் கூடியவிரைவில் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து, மக்கள் கலைந்து