குமரி : இரவு பெய்த கனமழை; தற்காலிக பாலம் சேதம்

குமரியில் நேற்றிரவு பெய்த கனமழையால், பாலப் பணிகளுக்காக கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது.;

Update: 2024-12-13 05:14 GMT
குமரி :  இரவு பெய்த கனமழை;   தற்காலிக பாலம் சேதம்
  • whatsapp icon
குமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் நேற்று (12-ம் தேதி)  நள்ளிரவு மழை பெய்தது.  இதனால் திடீரென காட்டாற்று வெள்ளம் அந்த பகுதியில் கரை புரண்டு ஓடியது.       இதில் மோதிரமலையில் ஆற்றின் குறுக்கே கடந்த ஆறு மாதகாலமாக 5 கோடி மதிப்பில்  மோதிரமலை -  குற்றியாறு மேல்மட்ட இணைப்பு பால பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பால பணிகளுக்கான இரும்பு தூண் பால பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை காட்டாற்று வெள்ளம் இரவில்  இழுத்து சென்றது.      மேலும்  பால பணிகளுக்காக போடப்பட்ட தற்காலிக தரை பாலமும் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்தது. இது குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்தால் மட்டுமே எந்த அளவிலான இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News