சென்னையில் சாலை ஓரம் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் படத்துடன் அடங்கிய சுவரொட்டி மீது மூதாட்டி ஒருவர் அவதூறு ஏற்படுத்துவது போல் சித்தரித்து புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை போலீசார் அந்த வீடியோவை எடுத்தது யார் என விசாரித்தனர். இதில் வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்தது சென்னையில் உள்ள கார் நிறுவனத்தில் பணிபுரியும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரதீஷ் (24) என்பது தெரிய வந்தது. தற்போது அவர் விடுமுறையில் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றது தெரிய வந்தது. சென்னை போலீசார் நேற்று குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டறை என்ற கிராமத்துக்கு வந்து பிரதிஷை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.