Update: 2025-01-07 04:12 GMT
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் எல்.கே.ஜி., மாணவி விழுந்து பலியான சம்பவத்தையடுத்து, அனைத்து தனியார் பள்ளிகளிலும் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.அதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில், தலா ஒரு மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், பி.ஆர்.சி., ஆசிரியர்கள் கொண்ட 30 குழுவினர் நேற்று முதல் தனியார் பள்ளிகளில் சோதனையை தொடங்கியுள்ளனர்.சி.இ.ஓ., அறிவழகன் தலைமையிலான குழுவினர் விழுப்புரம் இ.எஸ்., மேல்நிலை பள்ளியில் வகுப்பறை, கழிவறை, கழிவுநீர் தொட்டி, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவர், சி.சி.டி.வி.,க்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்களிடம் பள்ளி விதிமுறைகள், பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விசாரித்தனர்.

Similar News