பலி
ஈரோடு அருகே ரெயில் மோதி வடமாநில வாலிபர் பலி யார் அவர் ? போலீசார் விசாரணை;
ஈரோடு அடுத்த சங்ககிரி ரெயில் நிலையத்திற்கும் - மாவேலி பாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் இன்று காலை வட மாநில வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் உடல் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இருந்தாரா? அல்லது ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? என தெரியவில்லை. அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.