சிவகிரி அடுத்த கந்தசாமிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, சிவகிர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சதிரகாட்டுவலசு பளியகாட்டைச் சேர்ந்த சிவகுமார் (45), கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (41), தாண்டாம்பாளையம் சடையப்பன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (37), சந்திரசேகரன் (23), பிரவீன் (23), குப்புசாமி (35) வடுகப்பட்டியை சைர்ந்த சிவா(24) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த ரூ.3,230 பணத்தையும், சீட்டுக்கட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.