கைது

Update: 2025-02-24 03:32 GMT
அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு பிரிவு அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், ஈரோடு வில்லரசம்பட்டி, ஏ.ஏ.பி. நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 1,000 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல, பவானிசாகர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், அரசு பள்ளி அருகில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சஞ்சய் (24) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவரிடமிருந்த ரூ. 1,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்..

Similar News