மனு

ஈரோடு அருகே மலை கிராமங்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் விவசாயம் செய்து வரும் நிலத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update: 2025-02-25 04:18 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைகிராமத்தில் கூத்தம்பாளையம் மற்றும் குத்தியலாத்தூரில் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் மலைகிராமத்தில் பல தலைமுறைகளாக கம்பு,ராகி, சோளம், குச்சிகிழக்கு,கடலை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்‌.அவ்வப்போது வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் ஏற்படும் பயிர்கள் பாதிப்பிற்கான இழப்பீடு, அரசு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற விவசாய நிலத்திற்கான பட்டா தேவைப்படுகிறது‌ என்பதால் எந்தவித நிவாரணமும் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்தனர்.மேலும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விவசாய நிலத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆட்சியரிடம் மீண்டும் கோரிக்கை மனு வழங்கினர்.

Similar News