அபராதம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் விற்பனை கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை;

Update: 2025-02-26 03:13 GMT
மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.அதனடிப்படையில், சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டுக்கு பெரும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் கவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கும் தன்மையுடைய, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கவர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். 120 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றியே வியாபாரிகள் கவர்களை விற்பனை செய்யவேண்டும் என்றும், அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதி முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என அதிகாரிகள் அவ்வப்போது பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்தும் வருகின்றனர்.அதனடிப்படையில், ஈரோடு கொங்காளம்மன் கோவில் வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடை ஒன்றில் இன்று காலை ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள பிளாஸ்டிக் கவர்கள் மொத்த விற்பனை கடை ஒன்றில் விதிமுறைகளுக்கு மாறாக குறைந்த மைக்ரான் அளவுகளில் பிளாஸ்டிக் கவர்கள் 5 கிலோ அளவுக்கு விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News