தற்கொலை

சென்னிமலை அருகே பரிதாபம் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-02-26 03:21 GMT
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி, தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் சுப்பிரமணி, தனது உறவினர் ஒருவரை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தண்டனை காலம் முடிந்து ஊருக்கு வந்தார்.பின்னர், அவர் பழைய பேப்பர், பாட்டில்களை பொறுக்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணி நேற்று தனது உறவினர்களிடம், சென்னிமலை வனப்பகுதியில் உள்ள ஓடைபள்ளம் பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.‌ வெகு நேரமாகியும் அவரைக் காணாததால் அவரது உறவினர்கள், ஓடைப்பள்ளம் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு வேப்ப மரம் ஒன்றில் சுப்பிரமணி கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாகச் சென்று சுப்பிரமணியின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சுப்பிரமணிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதாகவும், அதனால் அவரது வலது காலை வெட்டி எடுக்க வேண்டும் என டாக்டர் கூறியதும், அதனால் மனம் உடைந்த சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Similar News