அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, பெருந்துறை போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துடுப்பதி பிரிவு பகுதியில் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடை உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்டம், மறவனேந்தல் பகுதியை சேர்ந்த கண்ணன் (35) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1,400 மதிப்பிலான 960 கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.