ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.