வழக்குப்பதிவு

பெருந்துறை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 17 வயது பள்ளி மாணவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.;

Update: 2025-03-29 07:24 GMT
வழக்குப்பதிவு
  • whatsapp icon
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், 17 வயது சிறுவன் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், சிறுவன் இருசக்கர வாகனத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காஞ்சிக்கோவில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News