தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் சுற்றுவட்ட பகுதிகளில் அழகாபுரி, கரிசல்குளம்,மைய்பாறை, நடுவப்பட்டி, வரகனூர், கலிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்று மதியம் திடீரென்று குளிர்ந்த காற்று வீசி கனமழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது.