பா.ஜனதா சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்
பல்லடத்தில் பா.ஜனதா சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்;
இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடியை கொண்டாடும் வகையில் பல்லடத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. பல்லடம்- மங்கலம் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலம் கடைவீதி பொங்காளியம்மன் கோவில் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிமணி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில், பா.ஜனதா நிர்வாகிகள் ரமேஷ், வடிவேல், கோகுல், கமலேஷ், கிருஷ்ணகுமார், சந்தானகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.