ஏறவாங்குடி அருகே மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று ஆன்லைன் டோக்கன் முறையை கைவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-05-30 09:01 GMT
அரியலூர், மே.30 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஏரவாங்குடி அருகே மாதாபுரம் புனித லூர்து அன்னை ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. 300 - க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் 1000 முதல் 20,000 வரை ரொக்கம், ட்ரெஸ்ஸிங் டேபிள், பீரோ,கட்டில் சைக்கிள், சில்வர் குவளை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஆன்லைன் டோக்கன் முறையை கைவிட வேண்டுமென மாடு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News