SDPI கட்சியின் 17ஆவது ஆண்டு துவக்க தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரத்தில் வைத்து கொடியேற்றம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் மைதின் கனி அவர்கள் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார் இதில் தமிழ் மாநில மீனவரணி இணை ஒருங்கிணைப்பாளர் கௌது மைதீன், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அஜீஸ், தூத்துக்குடி தொகுதி தலைவர் காதர்ஹூசைன், தூத்துக்குடி தொகுதி செயலாளர் ரியாஸ், தொகுதி துணை தலைவர் எடிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்ல முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.