பாஜக யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி;

Update: 2025-08-23 03:55 GMT
பாஜக யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் ஏழு இடங்களில் இது போன்ற மாநாடு கூட்டம் நடத்தப்படும். 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் அந்த தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் பாஜகவில் இன்னும் ஏராளமான சேர வாய்ப்பு உள்ளது. அமித்ஷா வருகைக்கு பின் எழுச்சி அதிகமாக ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக மாநாட்டில் விஜய் பேசும் போது பாஜக கொள்கை எதிரி என கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை யாருமே எதிரி கிடையாது. நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Similar News