தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு;

Update: 2025-09-05 02:58 GMT
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது‌. தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் குர்ஆன் ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆழிம், சதக்கத்துல்லா, ஆகியோர் சிறப்பு துவா ஓதப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News