தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பொட்டலூரணி விளக்கு பகுதி இந்த விளக்கு பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொட்டலூரணி கிராமம் இந்த கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் பொட்டலூரின் விளக்கு பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்லாத காரணத்தினால் இந்த பகுதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வந்தனர் இதைத் தொடர்ந்து பொட்டலூரணி பகுதி பொதுமக்கள் பொட்டலூரணி விளக்கு பகுதியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, திருநெல்வேலி தூத்துக்குடி செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்து கடந்த இரண்டாம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று பொட்டலூரணி விளக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஒட்டலூரணி கிராமப் பகுதியில் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் பொட்டலூரணி விளக்கு பகுதிக்கு வந்தனர் இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்தின சங்கர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் குறிப்பிட்ட சில பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளனர் மேலும் இதற்குரிய ஆணை வழங்கப்படும் என கூறியுள்ளனர் இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்கள் பொட்டலூரணி விளக்கு பகுதியில் ஓரமாக அமர்ந்தபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த பகுதியிலேயே காலை உணவும் சாப்பிட்டு வருகின்றனர் பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது