தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகில் இருந்த காளிமுத்து என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம் ஒரு மாதம் ஆகியும் இதுவரை உடல் கண்டுபிடிக்க படாத நிலையில் வறுமையில் வாடி வரும் அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும்.;

Update: 2025-09-22 12:12 GMT
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து மீனவர் ஆன இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தருவைகுளம் பகுதியை சேர்ந்த தினேஷ் சிங் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க 9 மீனவர்களுடன் சென்றுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக வலைகளை கடலில் வீசிவிட்டு மீனவர்கள் படகில் தூங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து மீன்பிடிப்பதற்காக சக மீனவர்கள் படகில் எழுத்து பார்த்த போது மீனவர் காளிமுத்து மாயமாகி இருப்பது தெரிய வந்தது இதை அடுத்து சக மீனவர்கள் காளிமுத்து கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என அந்த பகுதியில் உடலை தேடி உள்ளனர் ஆனால் காளிமுத்துவின் உடல் கிடைக்கவில்லை இதைத்தொடர்ந்து மீனவர்கள் உடனடியாக காளிமுத்து கடலில் மாயமான சம்பவம் குறித்து அவரது மனைவி வாசுகிக்கு தகவல் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த ஒரு மாதமம் ஆகியும் காளிமுத்து உடல் கிடைக்காததால் அவரது குடும்பம் வறுமையில் வாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் மீன்வளத்துறை மீனவர் காளிமுத்துவின் இறப்பை உறுதி செய்து இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மீனவர் நிவாரண நிதியில் இருந்து தனது கணவர் பலியானதற்கான நிவாரணம் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி நிதி ஆகியவற்றை வழங்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட வாசுகி மற்றும் அண்ணா சங்கு குளி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளத்தனர்

Similar News