Update: 2025-11-10 13:34 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி முருகன் கோவில் 12.வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 45. விவசாயியான இவர் தனது கொட்டகையில் 8 ஆடுகள்; 7 பசு மாடுகள் மற்றும் பசு கன்று குட்டி ஒன்று வளர்த்து வருகிறார். இவர், அருகே உள்ள பகுதியில் ஆடுகளை மேய்த்து மாலை நேரத்தில் ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆடு மாடுகளை கொட்டகையில் அடைத்து அருகே உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று நள்ளிரவு அந்த கொட்டகைக்குள் புகுந்த வெறிபிடித்த தெருநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் காலை கொட்டகையை பார்த்த போது, 8 ஆடு உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், பசு கன்று குட்டி உடலில் காயம் ஏற்பட்டு குடல்கள் வெளியே வந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தன. ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கண்ணீர் விட்டு விவசாயி கதறி அழுதார். இதனை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, அவர்கள் நேரில் சென்று விவசாயி சிவக்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி தொகை வழங்கினார். இதில் அதிமுக பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பட்டணம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Similar News