பொதுமக்கள விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை - மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் ஆணையாளர் நகராட்சி பணிபுரியும் அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமலும் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளதாக அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.;

Update: 2024-02-21 10:09 GMT

அதிமுக கவுன்சிலர்கள் புகார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டு பகுதியில் உள்ளன இந்த வார்டு பகுதியில் உள்ள பொது மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளுக்காக நரசிங்கபுரம் நகராட்சியில் வீட்டு மனை ரசீது, காலி மனை ரசீது, குடிநீர் ரசீது உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரையில் விண்ணப்பங்களுக்கான எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், புதிய குடிநீர் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய எந்த விண்ணப்பம் கொடுத்தாலும் அந்த விண்ணப்பத்திற்கு லஞ்சம் கேட்பதாகவும் லஞ்சம் தராத விண்ணப்பங்களை ஆவணங்கள் இல்லை என வேண்டுமென்றே மாதக்கணக்கில் தட்டிக் கழித்து வருவதாகவும் மனு கொடுத்த பொதுமக்கள் தினமும் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதாகவும் உடனடியாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள்.
Tags:    

Similar News