வாக்காளார் பட்டியலில் பெயர் இல்லை- அழுத மூதாட்டி!
கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் உயிருடன் இருக்கும்போதே வாக்கு இல்லாமல் போனதாக கண்ணீர் விட்டு பெண்மணி அழுதார்.
Update: 2024-04-19 13:44 GMT
கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோயில் வீதியை சேர்ந்தவர் குர்சித் பீவி(60).சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று தனது வாக்கினை செலுத்த வந்தார்.இந்நிலையில் அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி வாக்களிக்க முடியாது என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.இதனால் மனமுடைந்த மூதாட்டி தனது வாக்கினை செலுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நிலையில் சென்றார்.இது குறித்து மூதாட்டி கூறுகையில் நான் உயிருடன் இருக்கும் நிலையில் எனக்கு வாக்கு இல்லை என கூறுகின்றனர்.எனது கணவர் இறந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் கடந்த தேர்தலில் இங்கு தான் எனது வாக்கினை செலுத்தினேன்.ஆனால், இந்த முறை எனக்கு வாக்கு இல்லை எனவும் வாக்கு செலுத்த முடியாது என கூறுகின்றனர்.தமிழ்நாடு முதல்வரின் பெண்களுக்கான மகளிர் உரிமை தொகையை ரூ.1000 பெற்று வருவதாகவும் இது எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்றவர் மகளிர் உரிமை தொகை மட்டுமே எனக்கு ஆறுதல் அளித்து வருகிறது என்றார்.இந்த நிலையில் எனது நன்றி கடனை செலுத்த இன்று வாக்களிக்க வந்தேன் ஆனால் வாக்கு செலுத்த முடியவில்லை இது மிகவும் வேதனையாக இருக்கிறது என தெரிவித்த அவர் உயிருடன் இருக்கும் எனக்கு எப்படி வாக்கு இல்லாமல் போனது என் தெரியவில்லை என்றார்.