வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை-அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஒரு லட்சம் பேருக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

Update: 2024-04-19 13:38 GMT

ஒரு லட்சம் பேருக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார்.


கோவை:ராம்நகர் ரங்கநாதபுரம் மேல்நிலை பள்ளியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கணவருக்கு ஒர் இடத்திலும் மனைவிக்கு ஒரு இடத்திலும் வாக்கு இருப்பதாகவும் சில இடங்களில் ஒருவருக்கு வாக்கு உள்ளது மற்றவருக்கு இல்லை என தெரிவித்தார்.ஒரே வாக்குச்சாவடியில் 830 பேரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது எனவும் இந்த முறை திட்டமிட்டு ஒரு லட்சம் பேரின் வாக்குகள் நீக்ககப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் என்ன வேலை பார்த்து இருக்கிறது என தெரியவில்லை எனவும் ஒன்று இரண்டு என இருந்தால் பிரச்சனை இல்லை.ஒரே நேரத்தில் ஏராளமான வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளது எனவும் இதையெல்லாம் தாண்டி மக்கள் உற்சாகமாக வாக்களித்து் வருகின்றனர் என்றவர் நிறைய வாக்காளர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பல்லடம்,சூலூர்,கோவை என அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்சனை உள்ளதாகவும் என்ன லாஜிக்கில் அப்படி செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் ஓரே இடத்தில் நிறைய வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் மறுவாக்குப் பதிவு கேட்டிருக்கிறோம் என்றவர் வயதானவர்கள் மாற்று திறனாளிகளுக்கு போதிய போக்குவரத்து வசதி கொடுக்கபடவில்லை என்றார்.மாலை 6 மணி வரைக்கும் வாக்கு பதிவு செய்யலாம் என்ற நிலையில் 6 மணிக்கு வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஏழு மணி வரை வாக்கு பதிவு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். ஒரு பூத்துக்கு 20 ஓட்டுகளுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளது எனவும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு இருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது எனவும் பெரும்பாலும் பாஜகவில் இருந்து வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்ற அவர் நேர்மையான முறையில் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு இவற்றை கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் என்றார். தெப்பக்குளம் பகுதியில் ஒரு இடத்தில் இருநூறு ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை ஆவணப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் ஒரு லட்சம் வாக்காளர்களை கணக்கிடும் பணி என்பது பெரிய அளவில் இருக்கிறது.கணவருக்கு வாக்கு உள்ளது மனைவிக்கு வாக்கு இல்லை என்ற நிலை பல இடங்களில் இருப்பதாகவும் பெரிய அளவில் எல்லா பூத்களிலும் இதே நிலவு கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஆகி வருகிறது என பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags:    

Similar News