விளையாட்டு மைதானம் இல்லை....

ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாக உள்ளது.

Update: 2024-01-09 06:43 GMT

ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிக்கு என, விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டு நேர இடைவெளியில், பள்ளி வளாகத்தின் ஒரு சிறு பகுதியில் விளையாடும் நிலை இருந்து வருகிறது. இதனால், விளையாட்டு பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை மாணவ - மாணவியருக்கு உள்ளது. எனவே, ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி மனையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News