சாலை மேம்பாட்டு பணியில் முறையான அறிவிப்பு பலகை இல்லை என குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சாலை மேம்பாட்டு பணி நடைபெறும் பகுதியில் முறையான அறிவிப்பு பலகை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
சாலை மேம்பாட்டு பணி நடைபெறும் பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து முறையான அறிவிப்பு பலகை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் NH 77தேசிய நெடுஞ்சாலையில் கனராக வாகனம் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும்.HP பெட்ரோல் பங்க்அருகில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்பகுதியில் போதுமான அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தினால் கனரக வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் மத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் போதுமான எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் ஒப்பந்ததாரர்கள் முறையாக வாகன ஓட்டிகளுக்கு சாலையை குறிக்கும் வகையில் தகவல் பலகை வைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்