மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில்லை: பிஏசிஎல் முதலீட்டாளர்கள் முடிவு

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில்லை என பிஏசிஎல் முதலீட்டாளர்கள் முடிவு செய்து அதற்கான மனுவை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

Update: 2024-04-09 11:05 GMT
மனு அளித்த மக்கள்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என பிஏசிஎல்}இல் முதலீடு செய்துள்ளவர்கள் முடிவு செய்து, அதற்கான மனுவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்தனர்.

பிஏசிஎல் எனும் தனியார் காப்பீடு நிறுவனம் கடந்த 2014 ஆண்டு மூடப்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பணத்தை திருப்பித் தர செபி நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை.

இந்நிலையில், இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அரியலூர், செந்துறை,ஆர்.எஸ்.மாத்தூர், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், களப் பணியாளர்கள்,

முதலீட்டாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் முடிவு செய்து, அதற்கான மனுவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் புகார் பெட்டியில் திங்கள்கிழமை போட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News