நாடாளுமன்றத் தேர்தலில் பத்து நபர்களின் வேட்பு மனு தள்ளுபடி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையில் 34 நபர்களின் வேட்புமனு ஏற்கபட்டது 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2024-03-28 10:13 GMT

 மனுக்கள் தள்ளுபடி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி,திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உட்பட பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 44 மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 34 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News