மீனவர்களை நலம் விசாரித்த வடசென்னை வேட்பாளர் !

Update: 2024-04-05 11:52 GMT

ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட நாகூரான் தோட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். சென்ற 3ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் ஏற்பட்ட பழுது காரணமாக படகுகளுக்குள் விரிசல் ஏற்பட்டு கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்து கொண்டிருந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

மீதமுள்ள 8 மீனவர்களை கடலோர காவல்படை வீரர்கள் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் விபத்து எவ்வாறு நடைபெற்றது, விபத்தில் சிக்கியவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில் பகுதிக் கழகச் செயலாளர்கள் வ.பெ. சுரேஷ், இரா.செந்தில்குமார், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலாஜி, மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News