வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கு - 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது !

வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2024-07-04 07:18 GMT

 கைது 

சிவகாசி அருகே வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பங்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்(40) என்பவருக்கு சொந்தமான விமல் சிமெண்ட் புரடாக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கான்கிரேஸ் புயான்(43) என்பவர் நேற்று முன்தினம் நாரணாபுரம் புதூரில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.

Advertisement

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, நாரணாபுரம் புதூரை சேர்ந்த பாண்டிசெல்வம் என்பவரது 17 வயது மகன் வனப்பாண்டி மற்றும் தமிழ்மணி(21) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கான்கிரேஸ் புயான் கொலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவருடன் தகராறில் ஈடுபட்ட நாரணாபுரம் புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் வனப்பாண்டி, தமிழ்மணி ஆகிய இருவரை பிடித்து விசாரித்த போது, மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது என தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News