வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
பாரதிபுரம் பகுதியில் வட மாநில டீக்கடை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-29 02:34 GMT
வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
தர்மபுரி பாரதிபுரத்தில் செயல்படும் ஒரு டீக்கடையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னாதாஸ் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் டீக்கடை அருகாமையில் தனியாக அறை எடுத்து டீக்கடை ஊழியர்களுடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று ஜூன் 28 மாலை தனது அறையில் குளிக்கும் போது மயங்கி விழுந்துள்ளார் உடன் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தருமபுரி நகர காவல் துறையினர் அவர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.