"ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாக பதிவாகும் நோட்டா!"
தேர்தல்களில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நோட்டா என்ற பொத்தான் ஏற்படுத்தியதால், எளிதாக நோட்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-27 11:05 GMT
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பணிகள் செய்யும் நிலையில், வேட்பாளர்கள் ஒருபுறம் ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாக்காளர்கள் பலரும் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லாமல், நோட்டாவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டளிப்பதை விரும்புகின்றனர். காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில், 2019ல், 21,661 பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதியில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். அதிகபட்சமாக, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், 3,075 பேர், நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டுக்கு முந்தைய தேர்தல்களில், மின்னணு ஓட்டு இயந்திரங்களில் நோட்டா என்ற பொத்தான் இல்லை. யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர், 49ஓ என்ற சட்டப்பிரிவை பயன்படுத்தி விரலில் மை வைத்துக் கொண்டு ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே செல்ல வேண்டும். இதன்மூலம், வேட்பாளர் யாருக்கும் ஓட்டளிக்காமல் சென்ற வாக்காளர் விபரம், கட்சி ஏஜன்ட்கள் மூலம் வெளியே தெரிந்தது. அடுத்து வந்த தேர்தல்களில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நோட்டா என்ற பொத்தான் ஏற்படுத்தியதால், எளிதாக நோட்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.