தென்காசி சோதனை சாவடியில் போக்குவரத்து சார்பில் அறிவிப்பு பலகை
தென்காசி சோதனை சாவடியில் போக்குவரத்து சார்பில் அறிவிப்பு பலகை;
Update: 2024-07-04 05:04 GMT
அறிவிப்பு பலகை
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் பகுதியில் இருந்து ஏராளமான லாரிகளில் நாள்தோறும் கேரளாவிற்கு கனிம வளங்கள் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் டிஜிட்டல் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அதில் கனரக வாகனங்களில் சக்கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஓட்டக்கூடாது எனவும் மீறினால் வாகனங்களுக்கு அபராத விதிக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.