தாமிரபரணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதால் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலந்து உப்பு நீர் வினியோகம். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு.

Update: 2024-03-23 03:00 GMT

போராட்டம் அறிவிப்பு

குமரி மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் உறை கிணறுகள் அமைக்கபட்டு, அதில் இருந்து தண்ணீர் எடுத்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொது மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.கடந்த இரு மாதமாக ஆற்றில் மேல்வரத்து தண்ணீர் குறைவாக உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தடுப்பணை சுற்றுச்சூழல் உடைந்து ஆறு திசை மாறி சென்ற பகுதி வழியாக, கடல்நீர் ஆற்றில் புகுந்து படிப்படியாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உப்பு நீராக ஆட்டு நீர் மாறி உள்ளது இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு உப்பு நீர் விநியோகம் செய்யப்படுகிறது மேலும் கடல் நீர் ஆற்றில் புகாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் வரும் 25ஆம் தேதி மாங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முஞ்சிறை ஊராட்சி தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு.
Tags:    

Similar News