தேனி நகராட்சி பகுதியில் குப்பை கொட்டிய மருத்துவமனைக்கு நோட்டீஸ்
தேனி பென்னிகுயிக் நகர் பகுதியில் குப்பை கொட்டிய தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.;
Update: 2024-07-01 03:31 GMT
நகராட்சி அலுவலகம்
தேனி பென்னிகுயிக் நகர் பகுதியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக குடியிருப்புகள், அரசு மாணவர் விடுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகே இரவில் சிலர் குப்பை கொட்டி அதை தீ வைத்து சென்றுள்ளனர் அதில் மருத்துவமனை குப்பை சில கிடப்பதாகவும் நகராட்சிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் அதனை அடுத்து குப்பை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது