பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு 2ம் கட்ட நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு

பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு 2ம் கட்ட நிலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-14 15:15 GMT
பரந்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணியில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அத்திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலிலும், நிலம் கையகப்படுத்தும் பணியை, அரசு முடுக்கிவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், பயணியரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், தொழில், சுற்றுலா போன்ற துறைகளில், தமிழகம் மேலும் வளர்ச்சி அடையவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அதிக பயணியர் மற்றும் சரக்குகளை கையாளும் திறனில் சென்னையின் இரண்டாவது விமானம் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இப்புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. புதிய விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், புதிய விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம், பரந்துாரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு, அடுத்த 35 ஆண்டுகளுக்கு விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், ஆண்டுக்கு 10 கோடி பயணியரை கையாளும் வகையிலும், பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் 5,400 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News