உத்யாம் பதிவுச் சான்றிதழை பெறலாம் -ஆட்சியர் அறிவிப்பு

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான புதிய உத்யாம் பதிவுச் சான்றிதழை பெற்றுகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-25 10:11 GMT

உத்யாம் பதிவுச் சான்றிதழை பெறலாம் என பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய உத்யாம் பதிவுச்சான்றிதழை இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் . குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு இந்தியா முழுவதும் மாற்றி அமைத்துள்ளது. ரூ. 1 கோடிக்கு மிகாமல் இயந்திர தளவாட முதலீடு மற்றும் ரூ. 5 கோடிக்குள் மொத்த விற்பனை அளவு உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

இயந்திர தளவாட முதலீடு ரூபாய் 1 கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் 10 கோடி வரையிலும் மற்றும் மொத்த விற்பனை அளவு ரூபாய் 5 கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் 50 கோடிக்கு குறைவாகவும் உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது. இயந்திர தளவாட முதலீடு ரூபாய் 10 கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் 50 கோடி வரையிலும் மற்றும் மொத்த விற்பனை அளவு ரூபாய் 250 கோடி வரையிலும் உள்ள நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சுய உறுதிமொழியின் அடிப்படையில் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் மொத்த விற்பனை அளவு அடிப்படையில் இணையதளம் வழியாக சான்றிதழ் வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யாம் பதிவு இணையதளத்தில் இலவசமாக (www.udyamregistration.gov.in) பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News