பிரபல கொள்ளையன் கைது

அரூர், ஓமலூர் மற்றும் கிருஷ்ணகிரி தனிப்படை போலீசாரின் கூட்டு முயற்சியால் பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

Update: 2023-12-16 07:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம், 16/12/2023. அரூர், ஓமலூர், கிருஷ்ணகிரி, தனிப்படை காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் பிரபல கொள்ளையன் கைது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள H.ஈச்சம்பாடி கிராமத்தில் செந்தாமரை, ஜெயக்குமார் ஆகியோரின் வீட்டில் கடந்த 6-ம் தேதி ஒரே நாளில் இரண்டு வீட்டு கதவின் பூட்டை உடைத்து சுமார் 23 சவரன் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி கிருஷ்ணகிரி மாவட்ட பல்வேறு பகுதிகளிலும் தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பகுதிகளிலும் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பு ஏற்படுத்தியது, இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் தனிப்படையினர், கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படையினர், தர்மபுரி மாவட்ட அரூர் தனிப்படையினர், பிரபல கொள்ளையன் ராஜ்குமாரை கைது செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

மூன்று தனிப்படையினர்களும் ஒருங்கிணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டதால் பிரபல கொள்ளை ராஜ்குமார் நேற்று அரூர் காவல் துறையினார் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு அரூர் கச்சேரி மேடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் H.ஈச்சம்பாடி கிராமத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என தெரிய வந்தது. செந்தாமரை வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட ஆறு சவரன் தங்க நகைகளும் ஜெயக்குமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட17 சவரன் தங்க நகைகள் என மொத்தம் 23 சவரன் தங்க நகைகளை மீட்கப்பட்டு திருடன் ராஜ்குமார் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர். பிரபல கொள்ளையன் ராஜ்குமார் மீது தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கில் ஈடுபட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News