கீழ் சித்தாமூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கீழ் சித்தாமூர் கிராமத்தில் பவ்டா கல்லூரி சார் பில் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கீழ் சித்தாமூர் கிராமத்தில் பவ்டா கல்லூரி சார் பில் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது, இதற்கு கல்லூரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். கீழ்சித்தாமூர் தொடக்கப்பள்ளி ஆசிரியை சத்தியவதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கீழ்சித்தாமூர் ஊராட்சி மன்றத்த லைவர் அய்யம்மாள் கருணாநிதி கலந்து கொண்டு நாட்டு நலப் பணி திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழரசன், கிராம நிர்வாக அலு வலர் புஷ்பலதா, வக்கீல் மோகன்குமார், கருணாநிதி, ஊராட்சி செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதற் கான ஏற்பாடுகளை துணை முதல்வரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான சேகர் செய்திருந்தார். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பவ்டா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரவி நன்றி கூறினார்.