கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-06-27 17:22 GMT

போராட்டம் 

விருதுநகரில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Advertisement

கள்ளச்சாராய விற்பனை மற்றும் உயிரிழப்பை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News