துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து : தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Update: 2024-05-26 08:13 GMT

பைல் படம் 

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரிமல் புயலாக வலுப்பெற்றது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22-ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்தநிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரிமல் புயலாக வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் புயல் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிமல் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News