தாராபுரத்தில் நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தாராபுரம் பகுதியில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

Update: 2024-04-05 04:33 GMT

நுங்கு விற்பனை

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே கோடை வெப்பம் அதிகரித்து உள்ளதால் மக்கள் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் வெப்பத்தை தாங்கவும், உடல் சூட்டை தணிக்கவும், பழச் சாறு, மோர், கம்மங்கூழ் போன்றவற்றை பொதுமக் கள் குடிக்கின்றனர். அதேபோல இளநீர், நுங்கு போன்றவற்றை குடித்து தாகத்தை தணிக்கிண்றனர்.

இதற்கிடையே தாராபுரம் பகுதியில் பொதுமக்கள் தங்களது உடல் குளிர்ச்சியை பராமரிக்க பனை நுங்கு மற்றும் பதநீர் அருந்துகின்றனர். இதனால் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது நுங்கு விலை அதிகரித்து 1 நுங்கு ரூ.10- க்கு விற்பனை செய்யப்படுகிறது. பதநீர் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக் கள் கூறுகையில், வெப்பம் அதிகரிப்பால் உடல்  சூடு ஏற்படுகிறது. என்னதான் தண்ணீர் குடித்தாலும் வாய் வறண்ட நிலையில் உள்ளது. எனவே இளநீர், நுங்கு போன்றவற்றை அருந்துவதால் சற்று தாகம் தணிகின்றது. தற்போது நுங்கு விலை அதிகமாக உள்ளது என்றனர்.

இது தொடர்பாக நுங்கு வியாபாரிகளிடம் கேட்ட போது, இன்னும் தமிழ்நாட்டில் போதுமான அளவு நுங்கு வரத்து இல்லை. பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து தான் நுங்கு வருகிறது. அங்கிருந்து வருவதால் வாடகை மற்றும் செலவுகள் அதிகரிப்பதால் விலை அதிகம் வைத்து விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரும் வாரங் களில் வரத்து அதிகரிக்கும் போது நுங்கு விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

Similar News