நர்சிங் மாணவி தற்கொலை

இண்டமங்கலம் பகுதியில் உடல் நலப் பிரச்சினையால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-28 01:35 GMT

தற்கொலை 

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் இண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் இவரது 16 வயது மகள் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. பலஇ டங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனவேதனை யில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News