ஊட்டச்சத்து உணவு திருவிழா

சிவகங்கை மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட ஊட்டச்சத்து உணவு திருவிழா மற்றும் சத்துணவு போட்டி நடத்தப்பட்டது.

Update: 2023-10-22 08:55 GMT

ஊட்டச்சத்து உணவு திருவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிவகங்கை மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில் 12 வட்டாரங்களில் இருந்தும் 24 சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட ஊட்டச்சத்து உணவு திருவிழா மற்றும் சத்துணவு போட்டி நடத்தப்பட்டது. ஏற்கனவே வட்டார அளவில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற 3குழுக்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், போட்டியில் கலந்து கொண்ட சிறந்த குழுக்களுக்கு ஆறுதல் பரிசுக்கு 6 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் கூடுதல் இயக்குனர் ஊரக வளர்ச்சி, சிவகங்கை மகளிர் திட்ட இயக்குநர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News