கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.
இந்நிலையில் நகர் பகுதியை ஒட்டியுள்ள கீழமேல்குடி, மாங்குளம், சூரக்குளம், பில்லறுத்தான், கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்களை நகராட்சியுடன் இணைப்பதற்காக திட்ட அறிக்கை அனுப்பியதாக கூறப்படும் நிலையில் கிராமங்களை நகராட்சியுடன் இணைக்ககூடாது என தெரிவித்து கே. ஆலங்குளம்,
தயா நகர், தயாபுரம், கங்கை நகர், கலைகூத்து நகர், கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் ஆஷாஅஜித்திடம் மனு அளித்துள்ளனர். மனுவில், தங்கள் கிராமங்களை மானாமதுரை நகராட்சியுடன் இணைத்தால்,100 நாள் வேலைத்திட்ட வாய்ப்பும் பாதிக்கப்படும்.
அதை நம்பியுள்ள 500 -க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் அழிந்து போகும் நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, தங்களது கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.