போக்குவரத்துக்கு இடையூறு:20 வாகனங்களுக்கு அபராதம்
கும்பகோணம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு:20 வாகனங்களுக்கு அபராதம்.;
Update: 2024-04-02 02:02 GMT
அபராதம்
கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 இரு சக்கர வாகனங்களுக்கு காவல் துறையினா் நேற்றுஅபராதம் விதித்தனா். கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் விஜய் லூா்து பிரவீன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக பொருள்கள், விளம்பர பதாகைகள், பெயா் பலகைகள் வைக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினா் எச்சரிக்கை செய்தனா்.